ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு வருடந்தோறும் பொதுமக்கள் பலர் சாமி தரிசனம் செய்வதற்காக செல்வது வழக்கம். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் அதிகமாக குரங்குகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக தெரிய வந்தது.
அந்த குரங்குகள் மக்கள் பூஜை செய்வதற்காக கொண்டு செல்லும் பழங்கள், பொருட்கள் ஆகியவற்றை பறித்துக் கொள்வதால் பொதுமக்களுக்கு சிரமம் இருப்பதாக தெரிவித்தனர். எனவே பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் காட்டு விலங்குகளை விரட்டுவதற்காக பயன்படுத்தும் ஸ்மார்ட் குச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் அறிமுகம் செய்தனர்.
அந்த குச்சியில் இருந்து வரும் சத்தத்தை கேட்டு குரங்குகள் அங்கிருந்து வாலாட்டி விட்டு ஓடிவிடும். இதனைப் பார்ப்பதற்கு கேலியாக இருப்பதால் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் இதனை ரசித்தப்படியே செல்கின்றனர். வருகிற 16-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
இதனால் 15-ஆம் தேதி கோவில் வளாகம் மற்றும் கருவறையை சுத்தம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் அன்று 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படும். மேலும் 14 மட்டும் 15 -ஆம் தேதிகளில் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
