குஜராத்தில் கூகுள் மேப் (Google Maps) உதவியுடன் ஆள் நடமாட்டம் இல்லாத கோயில்களைக் கண்டறிந்து திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹமீர்பார் பகுதியில் உள்ள கோயில்களில் பூட்டை உடைத்து, 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் திருடிய பஞ்சபாய் கோலி மற்றும் ஜாவேத் காஞ்சி ஆகியோரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

​தேங்காய் உரிக்கும் கருவியைப் பயன்படுத்தி கோயில்களில் கைவரிசை காட்டிய இவர்கள், திருடிய நகைகளை விற்க முயன்றபோது சிக்கினர். விசாரணையில், திருடிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.