முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், இன்று (நவ. 23) திடீரெனக் கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது.

இந்தக் கடல் உள்வாங்கல் காரணமாகக் கடற்கரைப் பகுதி பாசி படிந்து, சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், பக்தர்கள் நடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த எதிர்பாராத இயற்கை நிகழ்வு, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடல் உள்வாங்கியதன் காரணமாகத் தற்போது வெளியே தெரியவரும் பாறைகள் மீது ஏறி, சிலர் எந்தவித அச்சமும் இன்றி செல்ஃபி எடுத்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சமயங்களில் பாறைகள் வழுக்குவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடல் உள்வாங்கும் நிகழ்வு சில நேரங்களில் இயற்கை மாற்றங்களால் சாதாரணமாக நடந்தாலும், அதன் தாக்கம் குறித்து ஆராய வேண்டும் எனப் பொதுமக்களும் பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.