தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று (நவ. 23) கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், ஒரத்தூர் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் இன்று காலை பெய்த கனமழையின் காரணமாக, சாலையோரம் நின்றிருந்த ஒரு புளிய மரம் திடீரெனச் சாய்ந்து மின்கம்பி மீது விழுந்தது. மரம் விழுந்த வேகத்தில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்ததில், அங்கு நின்றுகொண்டிருந்த மரிய சூசை (70), பிலோஸ் மேரி (60), மற்றும் வனதாஸ் மேரி (70) ஆகிய மூவர் மின்கம்பியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த மீட்புப் படையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
