திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை, குறிப்பாக நடிகை திரிஷாவை இழிவாகப் பேசியிருப்பது பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. அரசியல் ரீதியான விமர்சனங்களை விடுத்து, மாற்று கருத்துடைய பெண்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது திமுக நிர்வாகிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது.
மேடைகளில் பெண்களை அவதூறாகப் பேசுவதற்கு இவர்களுக்கு யார் உத்தரவிட்டது என்ற கேள்வியும், இத்தகைய பேச்சுகள் அவர்களின் அரசியல் தரத்தையே குறைப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தகைய சர்ச்சைப் பேச்சுகள் எழும்போதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் தற்காலிகமாக நடவடிக்கை எடுப்பது போல் காட்டிவிட்டு, பின்னர் அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பெண்களை அவமதிப்பதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் காப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனி இத்தகைய செயல்களைத் தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
