திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அ.ஜாபர் சாதிக் மீதான ஒழுங்கு  நடவடிக்கை தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ஜாபர் சாதிக். டெல்லியில் போதை பொருள் பிடிபட்ட விவகாரத்தில் ஜாபர் சாதிக் தேடப்பட்டு வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.