மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கு துரை வைகோவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கட்சியில் பூசல்கள் நிலவியது. இது தொடர்பான ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக வைக்கும் மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கினார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா செங்கோட்டையன் மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்றும் அவருடைய அனுபவத்தை தமிழக வெற்றிக்கழகம் பயன்படுத்தினால் நிச்சயம் அது அவர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறினார்.

அதன் பிறகு திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறி வேறு கூட்டணி மாறுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்தார். மதிமுக கட்சி திராவிட கூட்டணியில் மதில் மேல் பூனையாக இருப்பதாக தெரிவித்த அவர் நிச்சயம் கூட்டணி மாறுவதற்கான சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தற்போது திமுக ஆட்சி சிறப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்து வரும் தேர்தலிலும் கண்டிப்பாக திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்றும் கூறினார்.