வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தொண்டரின் இல்ல நிகழ்வில் கட்சித் தலைவரான திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் உரையாற்றிய அவர், சமீப கால கட்சி பணிகள் குறித்து விரிவாக தெரிவித்தார்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக விசிக நிர்வாகிகள் தேர்வு பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், அதற்கென அதிக நேரத்தை ஒதுக்கி வருவதாகவும் தெரிவித்தார். “எனது கண்ணில் கட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு ஆண்டிபயாட்டிக் மருந்து பயன்படுத்திக் கொண்டு, ஒரு நாளுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை பணியில் ஈடுபட்டு வருகிறேன். தொடர்ச்சியான பணியின் காரணமாக முட்டிவலி, கால்வலி அதிகரித்துள்ளது. உட்கார்ந்தால் முதுகெலும்பு முதுகெலும்பாக இல்லை; கழுத்தில் இருந்து இடுப்பு வரை இரும்புக் கம்பியை சொருகி வைத்தது போல வலி ஏற்படுகிறது. இருப்பினும், கட்சி பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வருகிறேன்,” என திருமாவளவன் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விசிக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
