அதிமுக கட்சியின் மூத்த தலைவர் வி.சி ராமையா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை அக்கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து அதிமுக கட்சியில் பணி செய்து வந்த நிலையில் இன்று காலை வாண்டா கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அதிமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.