அதிமுகவின் முன்னணி தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைவது குறித்து தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அதிரடியான ரகசியங்களை உடைத்துப் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைக்கு எங்களைப் பொறுத்தவரையிலும், ஜெயகுமாரைப் போன்றவர்கள் மற்றும் கட்சியில் இருக்கின்ற பிற முன்னணி தலைவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இன்றைக்கு நம்முடைய தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் இப்படி திடீரென ராஜினாமா செய்வதற்கு என்ன காரணம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து அதற்கான காரணத்தை விளக்கிய அவர், “திமுகவோடு அண்ணா திமுக கூட்டணி வைக்கிறார்கள் என்று சொன்ன உடனேயே தான் அங்கே பலர் மனது குமறிப் போய்விட்டார்கள்! இது இதுவரையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே நடைபெறாத ஒரு துரோகம். ஆகவேதான், ஜெயக்குமார் போன்றவர்கள் இன்றைக்குத் துணிச்சலாக ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்றைக்கு இணைந்திருக்கிறார்கள்!” என்று தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அதிமுகவின் உள்கட்சி பூகம்பத்தை பகிரங்கமாகப் போட்டுடைத்துள்ளார்.
