தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுக-வின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக ‘புதிய திராவிட கழகம்’ (PDK) தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் எஸ்.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் தங்களுக்குக் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாகக் கருதும் PDK, அந்தப் பகுதியில் 3 தொகுதிகளைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளது. திமுக-வின் ‘திராவிட மாடல்’ ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவே இந்த ஆதரவு என ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.

​கூட்டணி அறிவிப்போடு நிறுத்தாமல், அடுத்தகட்டமாக அதிரடிப் பிரச்சாரப் பணிகளிலும் PDK இறங்கவுள்ளது. பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அதிமுக-வின் செல்வாக்கை முறியடித்து, திமுக-வின் வெற்றியை உறுதி செய்வதே தங்களின் முக்கிய இலக்கு என PDK மேடைகளில் முழங்கத் தயாராகி வருகிறது. சிறிய கட்சிகளும் வரிசை கட்டி ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளதால், 2026 தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது!