தமிழக அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இப்போ செம ‘டைட்’ ஆகிட்டு இருக்கு. ஏற்கனவே பாமக அன்புமணி, டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் போன்றவங்க இணைஞ்சது அந்தத் தரப்புக்கு ஒரு பலத்தைக் கொடுத்தாலும், அதிமுக தரப்புக்கு இது ஒரு பெரிய தலைவலியாவே மாறியிருக்கு. கடந்த 2021 தேர்தல்ல அதிமுக 179 தொகுதிகள்ல தனித்துப் போட்டியிட்டது. ஆனா இப்போ பாஜக மேலும்கூட சில கட்சிகளை உள்ளே கொண்டு வந்தா, அதிமுக போட்டியிடுற தொகுதிகளோட எண்ணிக்கை 121 வரை குறைஞ்சிடும்னு ஒரு கணக்கு சொல்லுது. அதாவது கிட்டத்தட்ட 58 தொகுதிகளை மத்தவங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வருமோங்கிற பயம் அதிமுக வட்டாரத்துல அதிகமா இருக்கு.

​ஆனா, பாஜக-வோட பிளான் வேற லெவல்ல இருக்கு. திமுக-வை வீழ்த்தணும்னா ஒரு மெகா கூட்டணி வேணும்னு சொல்லி, இன்னும் சில கட்சிகளுக்கு ரகசியமா தூது விட்டுட்டு இருக்காங்க. இதைக் கேள்விப்பட்ட எடப்பாடி பழனிசாமி செம அப்செட்ல இருக்காராம். “நம்ம கோட்டையில மத்தவங்களுக்கு அதிக இடம் கொடுத்துட்டு நாம ஏன் பலவீனமாகணும்?” அப்படிங்கிறதுதான் அவரோட கேள்வியா இருக்கு. கூட்டணி வலுவாகுதா இல்ல அதிமுக-வோட பலம் குறையுதாங்கிற இந்த விவாதம் இப்போ எடப்பாடிக்கும் பாஜக தலைமைக்கும் இடையில ஒரு பனிப்போரையே உருவாக்கியிருக்கு!