பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கிருஷ்ணராயபுரம் பகுதியில் நடைபெறும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன், ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல், கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா? என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கல் குவாரிக்கு ரூ.23,55 கோடி அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும் கனிமவள கொள்ளை நடைபெறுவதாகவும் புகார் எழுந்த நிலையில் அங்கு செய்தி சேகரிக்க செய்தியாளரை கடத்திய நிலையில் போலீசாரின் பல கட்ட தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு அவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.