தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தற்காலிக சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் பணி நிரந்தரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியதாவது: தற்காலிகப் பணியாளர்கள் என்பது ஆண்டுக்கு 11 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள். ஒரு பணியின் காலம் முடிந்து மீண்டும் பணி நீட்டிக்கப்படும் போது, இடையில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு, புதிய ஒப்பந்தம் மூலமே அவர்கள் பணியைத் தொடர முடியும்.
இத்தகைய தற்காலிக ஊழியர்களை எந்த ஒரு அரசும் நேரடியாக பணி நிரந்தரம் செய்ய இயலாது. இது தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை. ஒருவேளை அரசு பணி நிரந்தரம் செய்ய முயன்றாலும், நீதிமன்றம் அதில் தலையிடும். ‘கம்யூனல் ரொட்டேஷன்’ (இட ஒதுக்கீடு முறை) பின்பற்றப்படாமல் பணி நிரந்தரம் செய்வது சட்டப்படி செல்லாது என நீதிமன்றம் உத்தரவிடும்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்துக் கருத்து தெரிவிப்பது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், “வேறெந்த மாநிலத்திலாவது இதுபோன்று தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்களா என்று அவரிடமே செய்தியாளர்கள் கேட்டுச் சொல்லுங்கள்” என்று சவால் விடுத்தார்.
தற்போதைய போராட்டங்கள் குறித்து அவர் பேசுகையில்: “இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டே சிலர் போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றனர். இது ஊழியர் சங்கங்களின் போராட்டமல்ல; தனிநபர்களின் தூண்டுதல் இதில் உள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் போராட்டத்தைத் தூண்டிவிடுவதாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இத்தகைய தூண்டுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊழியர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய நிலையில் இது சர்ச்சையாக மாறியது. இதன் காரணமாக தற்போது அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் தெரிவித்து ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அதில்.
,
போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவது திமுக அரசின் நோக்கமல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர், தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்: “நான் அரசியலுக்கு வரும் முன்பு தொழிற்சங்கத் தலைவராக இருந்தவன். 1980-களில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தலைமைச் செயலகத்திலேயே போராட்டத்தை நடத்தி, அவரை நேரில் வரவழைத்து விவாதம் செய்த அனுபவம் எனக்கு உண்டு. எனவே, தொழிற்சங்கம் மற்றும் போராட்டங்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
