திமுக கட்சியின் எம்பி கனிமொழி. இவர் இன்று தன்னுடைய 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் திமுக கட்சியில் இணைந்த நாள் முதல் நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தான் போட்டியிடுகிறார். இவர் தூத்துக்குடி எம்பி ஆக இருக்கும் நிலையில் கருணாநிதி உயிரோடு இருந்தால் காலம் முதற்கொண்டு தற்போது வரை நாடாளுமன்ற அரசியலில் இருக்கிறார். இந்நிலையில் இன்று 57வது பிறந்த நாளை கொண்டாடும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்த அவருடைய ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கனிமொழி எம்பி ஆதரவாளர்களை வழி நடத்திக் கொண்டு சட்டசபைக்கு செல்வது போல் அந்த போஸ்டர் இருக்கிறது. அவருடன் கலைஞர் கருணாநிதி மற்றும் பெரியார் ஆகியோர்களின் புகைப்படங்களும் கனிமொழி எம்பி திமுகவை வழிநடத்துவது போன்று சட்டசபைக்கு செல்வது போன்றும் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்று தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு எம்பி கனிமொழி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
