“ஆ.ராசாவை எதிர்த்தோ, தி.மு.க-வை எதிர்த்தோ நாம் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை!” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளால் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், த.வெ.க-வுடன் (தமிழக வெற்றிக் கழகம்) வி.சி.க இணைந்திருப்பதை தி.மு.க தொண்டர்களால் அவ்வளவு எளிதாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், அதனால் அவர்கள் வி.சி.க-வை விமர்சனம் செய்வது மனித இயல்புதான் என்றும் திருமாவளவன் எதார்த்தமாகப் பேசியுள்ளார்.
மேலும், இதற்காக தி.மு.க-வுக்கு எதிராக யாரும் வீதியில் இறங்கிப் போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனத் தொண்டர்களுக்கு அட்வைஸ் செய்துள்ள அவர், தி.மு.க மற்றும் ஆ.ராசா மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.
கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதோ என்ற த்ரில்லிங்கான சந்தேகங்களுக்கு மத்தியில், கூட்டணியைக் காப்பாற்ற திருமாவளவன் எடுத்துள்ள இந்த சாதுரியமான அரசியல் நகர்வு மாற்று முகாம்களை உற்றுநோக்க வைத்துள்ளது!
