திருச்சி மாவட்டம் பீமா நகரில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக இயக்கம் ஓய்வின்றி உழைப்பதால் இன்று வரை கம்பீரமாக நடைபோடுகிறது என்றார்.
மேலும், திமுகவை அழிக்க எதிரிகள் புதுப்புது உத்திகளைக் கையாள்வதாகவும், அதன் ஒரு பகுதியாகத் தற்போது ‘எஸ்.ஐ.ஆர்’ (SIR) என்ற உத்தியைக் கையில் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எத்தனை உத்திகளைக் கையாண்டாலும் திமுகவை ஒருபோதும் அழிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்த ஸ்டாலின், “பாஜகவும் தேர்தல் ஆணையமும் எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில்தான் அதிமுக உள்ளது” என்று விமர்சித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடுத்த வழக்கில் அதிமுக கபட நாடகம் ஆடுவதாகவும், “டெல்லியில் இருக்கும் பிக்பாஸ்க்கு எடப்பாடி பழனிசாமி ஆமாம்சாமி போட்டுத்தான் ஆகணும்” என்றும் ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.
