அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கும்பகோணத்திற்கு சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி பின்னர் பேசினார். அவர் பேசியதாவது,
கும்பகோணத்தில் காலம் காலமாக நெசவுத்தொழில் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது நெசவாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த நிலையில் தற்போது நெசவுத்தொழில் நலிவடைந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்காலம் அமைந்த பிறகு மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்படும். அதோடு மணமக்களுக்கு இலவசமாக பட்டு புடவையும் வழங்கப்படும் என்றார்.
அதோடு ஏழை நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார். நெசவாளர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ள அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும். மேலும் என்னிடம் நீங்கள் வைத்த கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு பரிசீலிக்கப்படும் என்றார்.
