சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தைப் பெருக்கிவரும் நிலையில், நேற்று (நவ. 25) அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் சிலர் இணைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஐஜேகே (IJK) கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரான பாஸ்கர், அதிமுகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து விலகிய 50-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய நிர்வாகியுமான சி.வி. சண்முகம் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த இணைப்பு நிகழ்வுகள், எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அதிமுகவின் களப்பணியை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
