தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் திமுக கட்சியில் தற்போது திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக, பாமக மற்றும் தவெக கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவர்கள் திமுக எம்எல்ஏ நல்லதம்பி முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் சட்டமன்றத் தேர்தலில் நெருங்கி வரும் நிலையில் தொகுதிகளை பலப்படுத்துமாறு மேலிடம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான பணிகளை திமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
