சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1600 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேப் போன்று வெள்ளி விலையும் கிராமுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 176 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
