தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் தோறும் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அவர் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த அதன் பிறகு அவரது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்த இருக்கிறார். அதன்படி வருகிற டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்காக டிஜிபியிடம் அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் விஜய் உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதில் நேரம் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.