பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2வது தெருவில் வசித்து வரும் ஸ்ரீனிவாசன் (35) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மங்கள லக்ஷ்மி போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல குடிபோதையில் வீட்டிற்கு வந்த சீனிவாசன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மங்கலக்ஷ்மி வீட்டில் இருந்த கத்தியால் கணவனின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மயங்கினார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவனை கத்தியால் குத்திய மங்கள லட்சுமியை கைது செய்த விசாரித்து வருகிறார்கள்.