jio நம் நாட்டின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றாகும். அதோடு பல வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப பல விதமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. இத்திட்டங்கள் பல்வேறு டேட்டா, செல்லுபடியாகும் காலங்கள் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் பிரீமியம் உள்ளடக்கத்துக்கான அணுகல் உள்ளிட்ட பலன்களுடன் வருகிறது.

அந்த வகையில் jio ரூ.249 திட்டம் நாளொன்றுக்கு 2gp டேட்டா, 23 நாட்கள் செல்லுபடியாகும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இது இலவச Jio TV , Jio Cinema , Jio Cloud மற்றும் Jio Security அணுகலையும் வழங்குகிறது. அதேபோல் ஜியோ ரூ.299 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அத்துடன் மொத்தம் 56 ஜிபி டேட்டா மற்றும் மேலே உள்ள திட்டத்தின் அதே பலன்களை வழங்குகிறது.