WhatsApp பயனர்களுக்கு மிஸ்டு கால்களுக்குரிய புது கால் பேக் சேவையை நிறுவனம் கூடியவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சேவையானது விண்டோஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இதன் வாயிலாக நீங்கள் தவறவிட்ட அழைப்புகளை எளிதாக கண்டறிந்து மீண்டுமாக அழைக்கலாம். இந்த புது கால்-பேக் சேவையைப் பயன்படுத்த மைக்ரோசாப்ட் ஸ்டோருக்கு சென்று வாட்ஸ்அப்-ன் சமீபத்திய பீட்டா பதிப்பைப் பதிவிறக்கவேண்டும்.

நீங்கள் வாட்ஸ்அப் பயனராக இருப்பின், சமீபத்திய பீட்டா பதிப்பைப் பதிவிறக்கம் செய்து, இந்த புது கால்-பேக் சேவையை பயன்படுத்தி மகிழலாம். இந்த புது அம்சம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. தற்போது அதன் சோதனை நடைபெற்று வரும் நிலையில், படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் அனுப்பப்படும்.

பீட்டா சோதனையாளர்களுக்காக நிறுவனம் பல்வேறு புது அம்சங்களை வெளியிடுகிறது. கால் பேக் பட்டனுடன் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் மற்றும் எடிட் பட்டன் அம்சமும் தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் பெறுகிறது.