இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதள பக்கங்களை பலரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் கணக்கை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இன்ஸ்டாகிராம் கணக்கை அழிக்கும் போது போட்டோ மற்றும் வீடியோ என அனைத்தும் அழிந்து விடும். நாம் அவ்வாறு டெலிட் செய்தவற்றை மீண்டும் எப்படி பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து முதலில் பார்க்கலாம்.

அதற்கு இன்ஸ்டாகிராம் open > புரொஃபைல் > மெனு > செட்டிங் > Request Download பட்டன் அழுத்தவும். > இ-மெயில் ஐடி > இவை அனைத்தையும் சரியாக செய்து விட்டால் சுமார் 48 மணித்தியாலங்களுக்குள் போட்டோ, வீடியோ, சாட்டிங் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உங்கள் இ-மெயிலுக்கு வந்து விடும். இதன் பிறகு உங்கள் கணக்கை டெலிட் செய்யலாம்.

நிரந்தரமாக கணக்கை டெலிட் செய்ய,

Login இன்ஸ்டாகிராம் கணக்கு >account deletion > கணக்கை அழிப்பதற்கான காரணம் தெரிவு > பாஸ்வேர்ட் > டெலிட் ஆப்ஷன்

தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்ய,

Login இன்ஸ்டாகிராம் கணக்கு > Profile >Edit Profile> select Temporarily disable my account > கணக்கை டி-ஆக்டிவ் காரணம் தெரிவு > பாஸ்வேர்ட்