புனே வாஹோலி பகுதியில் உள்ள கல்லூரி வாசலில், ஒரு டீக்கடை முன்பு அரங்கேறிய அந்தப் பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவையே உலுக்கியுள்ளது. கல்லூரி மாணவர் நாகேஷ் ஜக்தாப் தனது நண்பர்களுடன் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மங்கேஷ் மற்றும் பவன் என்ற இருவர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். “எங்களை எப்படி நீ திட்டலாம்?” என ஆவேசமாக எகிறிய அந்த கும்பல், அடுத்த நொடியே மறைத்து வைத்திருந்த ‘கோய்தா’ (வெட்டரிவாள்) கொண்டு நாகேஷை சரமாரியாக வெட்டியது. இதில் ஒரு வெட்டு நாகேஷின் தலையிலேயே ஆழமாகப் பதிய, அந்த ஆயுதம் மண்டையிலேயே சொருகிக் கொண்டது.

​ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நாகேஷைக் கண்டு அந்தப் பகுதியே அலறியடித்து ஓடியது. தலையில் சிக்கிய வெட்டரிவாளுடன் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்போரைக் கலங்க வைத்துள்ளது. டாக்டர்கள் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு அவரது தலையில் இருந்த அரிவாளை அகற்றி உயிரைக் காப்பாற்றியுள்ளனர். தலைமறைவான அந்தக் கொடூரர்களைப் போலீசார் தற்போது கைது செய்துள்ள நிலையில், கல்லூரி வாசலில் நடந்த இந்த ரத்தவெறித் தாக்குதல் மாணவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது