கேரளாவின் புகழ்பெற்ற வேம்பநாடு ஏரி இன்று ஒரு வரலாற்று சாதனைக்கு சாட்சியாக மாறியுள்ளது. வெறும் 11 வயதே ஆன ஒரு சிறுவன், தனது இரண்டு கைகளிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில், சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தை நீந்திக் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான். சற்றும் பதற்றமின்றி, அலைகளுக்கு மத்தியிலும் அசுர வேகத்தில் நீந்திய அந்த சிறுவன், இலக்கை நோக்கி முன்னேறிய விதம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
00:50.50 வினாடிகளில் இந்த அசாத்திய மைல்கல்லை எட்டிய அந்த சிறுவனுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. “கைகளை கட்டிப்போட்டாலும் சாதிக்கத் துடிப்பவனை எதனாலும் தடுக்க முடியாது” என்பதற்கு இந்த சிறுவனின் சாதனை ஒரு மிகச்சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
