சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர், அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “இனி எப்போதும் அருமை நண்பர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பின்னால் நான் அணிவகுத்து நிற்பேன். இது எனது வாழ்நாள் கடமையாக இருக்கும். 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நேரடியாக பிரச்சாரம் செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

“>

 

மேலும், திமுக ஒருசில சமூகத்தினருக்கு எதிரான கட்சி என கூறப்படுவது அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பரப்பும் வதந்தி மட்டும் எனக் குறிப்பிட்டார். “நம் முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்கும் உரிய முதல்வராக செயல்படுகிறார். எந்த ஒரு சமூகத்தையும் புறக்கணிக்காத விதத்தில் நல்லாட்சியை வழங்கி வருகிறார்” என பாராட்டினார். அவரது இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.