தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் பகுதியில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்காக இன்று திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக விமானம் மூலம் அவர் டெல்லி விரைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
