குஜராத் மாநிலத்தின் ஜூனாகட் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சிமெண்டு தொழிற்சாலை அருகே மனிதர் ஒருவரும் காட்டுச் சிங்கமும் நேருக்கு நேர் சந்தித்த  காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தகவலின்படி, தொழிற்சாலை வெளியில் நடந்து சென்ற அந்த மனிதர், திடீரென அங்கு வந்த சிங்கத்துடன் நேருக்கு நேர் சந்தித்துள்ளார்.

அந்தக் காட்சி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வீடியோவில், மனிதரும் சிங்கமும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து, உடனடியாக தலைதெறிக்க பின்வாங்கி வேகமாக ஓடிச் செல்வது தெளிவாகப் பார்க்கப்படுகிறது. இந்த திடீர் நேருக்கு நேர் சந்திப்பு சில வினாடிகள் மட்டுமே நீடித்தாலும், அது உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

“>

 

இந்த வீடியோ இணையத்தில் பரவியுள்ள நிலையில், பலரும் அதைப் பார்த்து அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், பாவ்நகர் பகுதியில் சிங்கத்திற்கு உணவளிக்க அருகில் சென்ற ஒருவர், புகைப்படம் எடுக்க முயன்றபோது சிங்கம் தாக்க முற்பட்ட வீடியோவும் வைரலானது. வனத்துறையினர், சிங்கம் போன்ற காட்டுவிலங்குகளுக்கு அருகில் செல்லாமல், பாதுகாப்பான தூரத்தில் இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.