ரயிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு திருடன், சக பயணிகளால் பிடிபட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். திருட்டு முயற்சியின் போது மாட்டிக் கொண்ட அவர், பயணிகளின் கோபத்துக்கு ஆளாகி, முகம், கை, கால்களில் ரத்தக் காயங்களுடன் ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார்.
அடி தாங்க முடியாத அவர், ஓடும் ரயிலில் இருந்து கீழே தொங்கிய நிலையில் இருந்தபோது, பயணிகள் அவரை மேலே ஏறவிடாமல் தடுத்து, வாட்டர் கேன், குப்பை உள்ளிட்ட பொருட்களை அவர் மீது வீசி எறிந்தனர். இந்தக் காட்சி, ரயிலின் வேகத்தையும், திருடனின் அவல நிலையையும் வெளிப்படுத்தும் வகையில், பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்தது.
உயிர் பிழைக்கும் நம்பிக்கையில், திருடன் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார். திருடியதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல், “உங்கள் கையில் அடி வாங்கி சாக மாட்டேன்” என்பது போல தப்பித்துக் கொண்ட அவர், பயணிகளின் கோபத்தை மேலும் தூண்டினார்.
View this post on Instagram
“>
இந்த முழு சம்பவமும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்தக் காட்சி, திருட்டு சம்பவங்களுக்கான பொதுமக்களின் எதிர்வினையை விவாதப் பொருளாக்கியுள்ளது.
