மத்தியப்பிரதேசம் ரத்லம் மாவட்டத்தில் நடந்த இதயத்தை உருக்கும் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நகர்ப்புற பகுதியில், பெண் ஒருவர் கை வண்டியில் வேர்க்கடலை, வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி தரையில் விழுந்தார். அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அவருக்கு உடனடி உதவி கிடைக்காமல் தவித்தனர்.
அந்த சமயம், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவல் நிலைய பொறுப்பாளர் நீலம் சௌகட், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். நிலையை உணர்ந்த அவர், எந்த வித தயக்கமுமின்றி உடனடியாக சிபிஆர் (CPR) செய்து, அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். நீலம் சௌகட்டின் இந்த வேகமான மற்றும் தன்னலமற்ற செயல், அங்கு இருந்தவர்களின் மனதை நெகிழ வைத்தது.
अचानक बेहोश हुई ठेला लगाने वाली लड़की, ट्रैफिक TI ने CPR से बचाई जान
रतलाम के दो बत्ती चौराहे पर अचानक बेहोश हुई ठेला लगाने वाली लड़की, ट्रैफिक TI नीलम चौगड़ ने CPR देकर बचाई जान, अब वायरल हुआ वीडियो. #Ratlam #CPR #LifeSaved #HeroCop pic.twitter.com/APfBLtLY60
— NBT Hindi News (@NavbharatTimes) August 10, 2025
“>
இந்த காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. “காவல்துறையில் இப்படிப்பட்ட உயிர்காக்கும் மனப்பாங்கு அனைவருக்கும் முன்மாதிரி” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். பலர், நீலம் சௌகட்டின் துணிச்சலையும், உடனடி செயல்பாடையும் புகழ்ந்து, அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
