“தமிழ்நாடு முழுக்க நான் ஆய்வு மேற்கொண்டாலும், வில்லிவாக்கம் தொகுதி என்பது என்னுடைய சொந்தக் குழந்தைக்குச் சமமானது” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். முன்பு இந்த தொகுதிக்கு என்று எம்.எல்.ஏ அலுவலகமே கிடையாது எனக் குறிப்பிட்ட அவர், தற்பொழுது மக்களின் வசதிக்காக சிட்கோ நகரில் உள்ள ராஜேஸ்வரி மஹாலை தற்காலிக எம்.எல்.ஏ அலுவலகமாக மாற்றியுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த அலுவலகத்தில் 6 வார்டுகளின் குறைகளையும் கேட்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள புதிய டோல் ஃப்ரீ நம்பர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து வில்லிவாக்கம் தொகுதி முழுக்க நேரடி அதிரடி ஆய்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்துள்ளார்.
