சென்னை: தமிழக அரசியல் களத்தில் இன்று யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பம் வெடித்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவதை உறுதி செய்யும் வகையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ள பேச்சு ஒட்டுமொத்த கோட்டையையும் அதிர வைத்துள்ளது!

​விசிக விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக தலைமை மற்றும் தவெக கூட்டணி குறித்து அனல் பறக்கும் பல அதிரடி கருத்துக்களை ஓப்பனாக உடைத்துள்ளார்.

​”விசிகவுடன் கூட்டணியில்லை என அறிவித்தது அண்ணன் ஸ்டாலின்!”

மேடையில் மிகக் காரசாரமாகப் பேசிய திருமாவளவன், “திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலைமையே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதுவரையில் நான் அதை அறிவிக்கவில்லை. திமுக தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்றுகூடி, விசிகவில் இருந்த முக்கிய நபர் ஒருவரைத் தங்கள் கட்சியில் இணைத்த போதே, எங்களுடன் கூட்டணியில்லை என்பதை திமுக உணர்த்திவிட்டது. விசிகவுடன் கூட்டணியில்லை என அறிவித்தது அண்ணன் மு.க.ஸ்டாலின் தான்” என்று மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்!

தவெக கூட்டணி குறித்து திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு!

மேலும், தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்துடனான கூட்டணி குறித்துப் பேசிய அவர், “திமுக கூட்டணியில் போட்டியிட்டுவிட்டு, தவெக வெற்றி பெற்றதில் எப்படி நாம் மகிழ்ச்சியடைய முடியும்? தவெகவை விமர்சித்துவிட்டுப் பதவிக்காக எப்படிப் போய் ஒட்டிக்கொள்ள முடியும்? தவெகவுடனான கூட்டணி குறித்து இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், வரும் காலங்களில் கூட்டணி அமைந்தால் அதில் விசிக கண்டிப்பாக இடம்பெறும், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று அதிரடியாகக் கூறியுள்ளார்!

​முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் விசிக சாயத் தொடங்கியிருப்பது, எதிர்க்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தரப்புக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நகர்வால் தமிழக அரசியல் களம் இப்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது!