தவெக கட்சி தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் பதிந்து மிரட்டும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

தமது அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகள் பதிந்து கொடுமை செய்வது ஜனநாயகத்திற்கே எதிரான செயல் என்றும், தவெக தொண்டர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டால் அதற்கெதிராக அதிமுக கடைசி வரை போராடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இவ்வகையான நடவடிக்கைகள் திமுக அரசின் மரபு போன்று தொடருகிறது என்றும், மக்கள் இதற்கெதிராக ஒருமித்து குரல் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனுடன், சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் நடந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏன் மறுத்து வருகிறார் என கேள்வி எழுப்பியுள்ள ஜெயராமன், இந்த விசாரணை துல்லியமாக நடைபெற வேண்டும் என்றால் அது சிபிஐ வழியாகவே நடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விசாரணையைத் தவிர்ப்பதன் மூலம் திமுக அரசு எதையாவது மறைக்க முயற்சி செய்கிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுவதற்கான சூழ்நிலையை திமுக தானாகவே ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.