2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சிபிஎம் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஆனால், தவெக ஆட்சி அமைப்பதற்கு அதிமுகவின் ஒரு தரப்பினரும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் புதிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து அதிரடி கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் சண்முகம், “அதிமுகவின் ஆதரவை ஒருவேளை தவெக ஏற்றுக்கொண்டால், அது மக்கள் அளித்த தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரான ஒன்றாக அமைந்துவிடும்; அப்படி ஏதேனும் மாற்றங்கள் நடந்தால் தவெக-வுக்கு சிபிஎம் அளித்துள்ள ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும்” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஆட்சி அமைக்கத் தீவிர முயற்சி எடுத்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக-வுக்கு சிபிஎம் கொடுத்துள்ள இந்த திடீர் அழுத்தம், கூட்டணி மற்றும் ஆட்சி அமைக்கும் அடுத்தகட்ட நகர்வுகளில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
