தவெக-வின் கொள்கையும், பாமக-வின் கொள்கையும் ஏறத்தாழ ஒன்றுதான் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனே பாமக-வின் நோக்கம் என்பதால், தவெக-வின் செயல்பாடுகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் பாமக ஆதரிக்கும், கெட்டது செய்தால் எதிர்க்கும் எனக் கூறியுள்ளார்.