தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே வேலை முடிந்து வீடு திரும்பிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும், இதுபோன்ற தொடர் குற்றங்களைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் தமிழ்நாடு முன்னாேடியாகத் திகழ்வதை இந்த புதிய அரசு தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் தனது கடமையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
