தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் கடைப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை யார் இயக்க உள்ளார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த ரேஸில் நான்கு இயக்குனர்களின் பெயர் அடிபட்டது. தற்போது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி விஜய் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.