தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ஒரே நாளில் மூன்று மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். காலை 10.30 மணிக்கு திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பிரசாரத்தை தொடங்கும் அவர், அங்கிருந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக பிரசாரங்களில் பங்கேற்கிறார்.
விஜயின் இந்த ஒரேநாள் மூன்று மாவட்ட சுற்றுப்பயணம், தவெக தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் விஜயின் பிரசாரம் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “தளபதி 2026” என்ற பெயரில் நடக்கும் இந்த பிரச்சாரம், தமிழக அரசியலில் பரபரப்பை அதிகரிக்கும் வகையில் பேசுபொருளாகியுள்ளது.
