தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா சமீபத்தில் நடிகர் விஜய்யின் காரையே மறித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தப் பிரச்சனை கட்சிக்குள் பெரும் சலசலப்பை உண்டாக்கிய நிலையில், தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளான நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் அஜிதாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 2026 தேர்தலுக்குத் தயாராகி வரும் வேளையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதலைச் சரிசெய்ய தலைமை தீவிரமாக முயன்று வருகிறது.