பரபரப்பான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. 3 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கிய பிரஃபுல் ஹிங்கே, கடைசி ஓவரில் துல்லியமாக பந்துவீசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அதிரடி தொடக்கம்:
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா (22 பந்துகளில் 59 ரன்கள்) மற்றும் ஹென்ரிச் கிளாசன் (59 ரன்கள்) அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் அந்த அணி 225 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஜேமி ஓவர்டன் (தலா 3 விக்கெட்டுகள்) அபாரமாக செயல்பட்டு ஹைதராபாத்தை 194 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.
சென்னை போராட்டம்:
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு ஆயுஷ் மாத்ரே (30), மேத்யூ ஷார்ட் (34) மற்றும் சிவம் துபே (21) ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். எனினும், முக்கியமான நேரத்தில் இஷான் மலிங்கா (3 விக்கெட்டுகள்) சென்னை வீரர்களை அவுட் செய்து நெருக்கடி கொடுத்தார்.
இஷான் கிஷனின் வியூகம்:
கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஹைதராபாத் கேப்டன் இஷான் கிஷன் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். ஏற்கனவே 3 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கியிருந்த விய்தர்பா வீரர் பிரஃபுல் ஹிங்கேவிடம் பந்தைக் கொடுத்தார்.
மறுமுனையில் சிக்கனமாக பந்துவீசிய ஷிவாங் குமார் இருந்தும், ஹிங்கே மீது நம்பிக்கை வைத்தார் கிஷன். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், ஹிங்கே அந்த ஓவரில் வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
காவ்யா மாறன் கொண்டாட்டம்:
தோல்வியின் பிடியில் இருந்த ஆட்டம் திடீரென ஹைதராபாத் வசம் திரும்பியதை கண்ட சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன், உற்சாக மிகுதியில் துள்ளிக்குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கொண்டாட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
On Target 🎯
Sakib Hussain with the huge wicket of Shivam Dube 🔥
Updates ▶️ https://t.co/uJG04r8iXD #TATAIPL | #KhelBindaas | #SRHvCSK | @SunRisers pic.twitter.com/Yba4ahfehE
— IndianPremierLeague (@IPL) April 18, 2026
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு 180 ரன்களுக்கு மேல் இலக்கைத் துரத்தும்போது சிஎஸ்கே அணிக்கு இது மற்றொரு ஏமாற்றமான தோல்வியாக அமைந்தது.
Holding their nerves and jumping into the Top 4⃣ on the points table 🧡@SunRisers make it 🔙 to 🔙 victories with a last-over win against #CSK 👏
Scorecard ▶️ https://t.co/uJG04r8iXD #TATAIPL | #KhelBindaas | #SRHvCSK pic.twitter.com/8EdGMHWgPA
— IndianPremierLeague (@IPL) April 18, 2026
