ஐபிஎல் 2026 தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.

சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி, பில் சால்ட்டின் அதிரடி அரைசதத்தால் (63 ரன்கள்) 175 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 19 ரன்களில் ஆட்டமிழந்தாலும், களத்தில் அவர் செய்த ஒரு ‘டிஆர்எஸ் மாஸ்டர்கிளாஸ்’ வைரலாகி வருகிறது.

புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் பதும் நிசங்காவுக்கு நடுவர் அவுட் கொடுக்க மறுக்க, கோலி நம்பிக்கையுடன் ரிவியூ எடுக்கச் சொன்னார். இறுதியில் மூன்றாம் நடுவர் அதை அவுட் என அறிவிக்க, கோலியின் துல்லியமான கணிப்பைக் கண்டு ரசிகர்கள் மெய்சிலிர்த்தனர். இருப்பினும், 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் கே.எல்.ராகுல் (57) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (60*) ஆகியோரின் அபார ஆட்டத்தால், கடைசி ஓவரில் டேவிட் மில்லர் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆர்சிபி-யின் வெற்றிக் கனவைத் தகர்த்தார்.

“>