ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்திற்கு முன்னதாக, சிஎஸ்கே நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி தனது சிறு வயது ரசிகர் ஒருவருடன் செலவிட்ட நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் வலைப்பயிற்சியின் போது அந்த சிறுவன் தோனியிடம் கையெழுத்து கேட்க, அவர் மிகவும் கனிவுடன் அந்த சிறுவனின் பேட்டில் கையெழுத்திட்டுள்ளார். மேலும், அந்த சிறுவனின் தந்தை வழங்கிய தோனியின் புகைப்பட சட்டத்தை  பெற்றுக்கொண்ட தோனி, மீண்டும் அதை அந்த சிறுவனிடமே கொடுத்து “இதை அப்பாவிடம் கொடு” என்று அன்புடன் கூறியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

“>

இதனால் கால்நூட்டி காயம் காரணமாக இந்த சீசனின் முதல் ஆறு போட்டிகளில் விளையாடாத தோனி, வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மும்பை அணிக்கு எதிரான இந்த முக்கிய போட்டியில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் மைதானத்திற்கு திரும்புவது சென்னை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. களத்திற்கு வெளியேயும் தனது எளிமையான மற்றும் அன்பான குணத்தால் ரசிகர்களின் இதயங்களை வென்று வரும் தோனியின் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் ‘தல’ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.