ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் அக்சர் படேலின் முடிவுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார். இப்போட்டியில் பகுதிநேர பந்துவீச்சாளரான நிதிஷ் ராணாவிற்கு நான்கு ஓவர்கள் முழுமையாக வழங்கப்பட்ட அதேவேளையில், உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு தலா இரண்டு ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
மேலும் ராணா தனது 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 55 ரன்களை வாரி வழங்கினார். டெல்லியின் இந்தத் தவறான வியூகமே அவர்களின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சுட்டிக்காட்டியுள்ளார். அக்ஷர் படேலின் கேப்டன்சி குறித்துப் பேசிய அஸ்வின், குல்தீப் யாதவ் போன்ற ஒரு விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளருக்கு முழுமையான ஓவர்களை வழங்காதது மிகப்பெரிய தவறு என்று கூறினார்.
📢 Ravi Ashwin slams Axar Patel for poor captaincy and zero game awareness.
Ashwin said 🗣️ :
“In DC’s bowling attack, they have Axar Patel, Kuldeep, Lungi, Mukesh, and Natarajan. But the first player to complete his 4-over quota was Nitish Rana — and that’s where they lost the… pic.twitter.com/U2NGNAloxr
— AK 45 (@ImRo45_Club) April 21, 2026
“>
இதனால் “உங்களிடம் அக்ஷர், குல்தீப், லுங்கி இங்கிடி, முகேஷ் குமார் மற்றும் நடராஜன் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் இருந்தும், நிதிஷ் ராணா முதலில் தனது 4 ஓவர்களை வீசி முடித்தது ஆச்சரியமாக உள்ளது; அங்கேயே டெல்லி போட்டியை இழந்துவிட்டது” என்று அவர் விமர்சித்தார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஓவர்களை வழங்கியிருக்க வேண்டும் என்றும், இந்தத் தோல்வி டெல்லி அணிக்கு ஒரு படிப்பினையாக அமையும் என்றும் அஸ்வின் மேலும் தெரிவித்துள்ளார்.
