தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தபோது, அங்கு அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தனது வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றபோது, சாலையோர வீடுகளின் மொட்டை மாடிகளிலும், பால்கனிகளிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஒரு வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த இளம்பெண் ஒருவர், விஜய்யைப் பார்த்ததும் உற்சாகத்தில் கத்தத் தொடங்கினார். கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும், அந்தப் பெண்ணின் சத்தத்தைக் கவனித்த விஜய், அவரைப் பார்த்து புன்னகைத்து கையசைத்துள்ளார்.
தனது அன்புக்குரிய நாயகன் தன்னைப் பார்த்து கையசைத்ததைக் கண்ட அந்தப் பெண், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். “விஜய் என்னைப் பார்த்துட்டாரு.. எனக்கு கை காட்டிட்டாரு!” என்று கத்திக் கொண்டே மொட்டை மாடியில் துள்ளிக்குதித்து தனது சந்தோஷத்தைக் கொண்டாடினார்.
சுற்றி இருந்தவர்கள் அந்தப் பெண்ணின் மகிழ்ச்சியைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். விஜய்யின் ஒரு சிறு அசைவு, ஒரு சாதாரண ரசிகைக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதைக் காட்டும் இந்த வீடியோ, தற்போது ‘தளபதி’ ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
