தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் இதனை தொடர்ந்து ரஜினியை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படம் குறித்து DOP மனோ பரமஹம்சா சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது இந்த படத்தை ஐ மேக்ஸ் கேமராவை கொண்டு படமாக்கப்படுகிறது. இந்த படத்தின் கதை குறித்து லோகேஷ் என்னிடத்தில் ஒரே ஒரு வரி தான் கூறினார். அதை வைத்து பார்க்கும் போது இந்த படம் ஒளிப்பதிவாளருக்கு சேலஞ்ச் ஆனா படமாக இருக்கும். மேலும் இந்த படத்தில் நிறைய VFX காட்சிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.