33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் என்னுடைய வழிகாட்டியான அமிதாப் பச்சனுடன் இணைகிறேன் என புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினி குறிப்பிட்டிருந்தார். இதனை quote செய்து, நீங்கள்தான் தலைவர் என ரஜினியை அமிதாப் பச்சன் புகழ்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் அடுத்ததாக 170 ஆவது திரைப்படம் உருவாகும் நிலையில் ஞானவேல் இயக்கும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.