நடிகை அனுஷ்கா மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான மிஸ் போலி ஷெட்டி மிஸ்டர் ஷெட்டி படத்தின் வெற்றி மூலம் மகிழ்ச்சியில் உள்ள அனுஷ்கா, மலையாளத்தில் களமிறங்க உள்ளாராம். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கும் படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மலையாள சினிமாவிலும் தனது வெற்றி கொடியை நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.